தூக்கு தண்டனையை தாமதம் செய்ய நிர்பயா குற்றவாளி செய்த தந்திரம்: அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்

வியாழன், 20 பிப்ரவரி 2020 (09:24 IST)
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்ததும், இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்ததும் தெரிந்ததே.
 
இந்த தூக்கு தண்டனையை ஜனவரி 22ந்தேதி மற்றும் பிப்ரவரி 1ந்தேதி ஆகிய தேதிகளில் நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒருசில காரணங்களால் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.  இந்த தேதியில் நிச்சயம் கொலையாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் தூக்கு தண்டனையை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான வினய் தனக்குத்தானே காயத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார். சமீபத்தில் சிறையின் சுவரில் தலையை மோதி தனக்குத்தானே குற்றவாளி வினய் காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனை கைதி முழு உடல்நலத்துடன் இருந்தால் மட்டுமே தூக்கிலிட முடியும் என்பதால் இந்த காயம் காரணமாக மீண்டும் தூக்கு தண்டனை தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்