இந்நிலையில் வாத்ஸாயயரா எழுதிய காமசூத்திரத்திற்கு 13 ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய யசோதரா என்பவரை இக்கல்விக்கொள்கையில் குறிப்பிடுள்ளார்கள். அதாவது யசோதரா எழுதிய ஜெயமங்கலா என்ற புத்தகத்தில் மொத்தம்ம் 512 கலைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை 21ஆம் நூற்றாண்டில் மாணவர்கள் எல்லா சவால்களையும் கடந்து வெற்றி பெறத்தான் உஇவர் கூறியுள்ள கலைகளை கற்ற வேண்டும் என்ற நோக்கில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்தோ என்று கல்வியாளர்கல் கேள்வி எழுப்புகிறார்கள்.