புதிய பயிர்க் காப்பீட்டு திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியாழன், 14 ஜனவரி 2016 (03:50 IST)
புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 

 
டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 
தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் காப்பீடு ப்ரீமியத்துக்கான சுமை குறைக்கப்படும். மேலும், காப்பீடு செய்யப்பட்ட தொகை முழுமையாகவும், விரைவாகவும் கிடைக்கும்.
 
இதன் மூலம் மத்திய அரசின் பண மானியம் சுமார் 7000 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்