நுரையீரல் புண்களை உருவாக்கும் ஆல்பாவை விட ஆபத்தான புது கொரோனா

திங்கள், 7 ஜூன் 2021 (15:40 IST)
ஆல்பாவை விட ஆபத்தான B.1.1.28.2 என்ற அதிக ஆபத்தான கொரோனா மரபணு மாற்ற வைரஸ் புனேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீப நாட்களாக இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து 1 லட்சமாக உள்ளது. 
 
இந்நிலையில், B.1.1.28.2 என்ற அதிக ஆபத்தான கொரோனா மரபணு மாற்ற வைரஸ் புனேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரேசிலில் இருந்து வந்தவர்களிடம் இருந்து இந்த மரபணு மாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த வைரஸ் இந்தியாவில் உள்ள டெல்டா போன்றது என்றாலும், ஆல்பாவை விட ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு,  B.1.1.28.2 மரபணு மாற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல் எடை குறைதல் சுவாச குழாயில் வைரஸ் வளர்ந்து நுரையீரல் புண்கள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்