வலுக்கட்டாயமாக வாயில் மது ஊற்றி நேபாள பெண் கூட்டு பலாத்காரம்: டெல்லியில் அட்டூழியம்!!
திங்கள், 13 மார்ச் 2017 (13:02 IST)
வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி டெல்லியில் 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 பீபிஒ ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு டெல்லி முனிர்கா பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்தப் பெண்ணை அவரது ஆண் நண்பர் விகாஸ் தனது நண்பர்கள் கொடுக்கும் பார்ட்டிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அந்தப்பெண்ணும் தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது வழியில் தனது இரண்டு நண்பர்களை சந்தித்த விகாஸ் அவர்களையும் அழைத்துக்கொண்டு பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
பார்டியில் இருந்த தனது 3 நண்பர்களையும் அந்தப்பெண்ணுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் வாயில் 5 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளனர். இதில் போதை தலைக்கு ஏறிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணை 5 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.
காலை 5.30 மணியளவில் அவர்களிடம் இருந்து தப்பித்து முதல் மாடியின் பால்கனிக்கு சென்ற அந்தப் பெண் அங்கிருந்து குதித்துள்ளார். இதில் கால்களில் காயமடைந்த அவர் அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.
இதையடுத்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லக்ஷயா, விகாஸ் குமார், நவீன், ஸ்வரித், ப்ரதீக் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.