நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நாசிக் அச்சகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 40 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. அதையடுத்து நாசிக் அச்சகம் 5 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.