காஷ்மீரில் ரம்ஜான் கொண்டாட்டம்: பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்

வியாழன், 9 ஜூலை 2015 (00:16 IST)
காஷ்மீரில் ரம்ஜான் கொண்டாட்டத்தில்,  பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்
 

 

ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். வரும் ஜூலை13ஆம் தேதி அன்று நரேந்திர மோடி இந்தியா திரும்புகிறார்.
 
இதனையடுத்து, ஜூலை 17ஆம் தேதி நரேந்திர மோடி, காஷ்மீர் செல்கிறார். ஜூலை 18ஆம் தேதி ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, அன்றைய தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
 
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீநகரில்  நடைபெறும் இப்தார் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், ஜூலை 17ஆம் தேதி ஜம்மு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு முன்னாள் அமைச்சர் கிரிதாரி லால் தோக்ராவின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்