எனக்கு சரக்கு அடிக்க கற்றுக் கொடுத்ததே அவர்தான் : நடிகை ஊர்வசி ஓபன் டாக்

செவ்வாய், 25 அக்டோபர் 2016 (11:29 IST)
தனக்கு மது அருந்த கற்றுக் கொடுத்தது தன்னுடைய முன்னாள் கணவன்தான் என நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.


 

 
முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நெருக்கமானவர் நடிகை ஊர்வசி. அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை அவர் திருமணம் செய்து கொண்டார்.
 
ஆனால் அவர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு ஊர்வசி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
என் முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். அவர்களால்தான் எனக்கும் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. என் மகளை கண்டிப்பாக சினிமாவில் நடிக்க அனுமதிக்க மாட்டேன். அவர் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்