இந்த நிலையில் இன்று மும்பையில் மட்டும் 6923 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மும்பையில் 8 பேர் உயிரிழந்தனர் என்றும் இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,649 ஆக உயர்ந்துள்ளதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது
மேலும் மும்பையில் மொத்தம் இதுவரை சுமார் 4 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, மகாராஷ்டிரா மாநிலத்தின் மற்றொரு முக்கிய நகரமான நாக்பூரில் இன்று மட்டும் 3970 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,479 பேர் குணமாகி வீடு திரும்பியதாகவும் 58 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன