உலகில் மிகவும் நேர்மையான நகரங்கள் குறித்து ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை ஆய்வு மேற்கொண்டது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் முக்கியமான 19 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த நகரங்களில் அடையாள அட்டை, கொஞ்சம் பணத்துடன் மக்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் சில பர்ஸ்கள் வேண்டுமென்றே போடப்பட்டன. இதில் எத்தனை பர்ஸ்கள் உரியவரிடம் சென்று சேர்கின்றன என ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு கைவிடப்பட்ட 12 பர்ஸ்களில் 11 பர்ஸ்கள் உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக இந்திய நகரமான மும்பையில் 12 பர்ஸ்களில் 9 பர்ஸ்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேர்மையான நகரங்களில் மும்பை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.