முதல்வர் வீட்டின் முன் அனுமன் பாடல்களை பாடப்போவதாக அறிவித்த நடிகை கைது!

சனி, 23 ஏப்ரல் 2022 (18:37 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் வீட்டின் முன் அனுமன் பாடலை பாட போவதாக அறிவித்த நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்ட போது பெரும் வன்முறை வெடித்தது என்பதும் இதனை அடுத்து சில விரும்பத்தகாத செயல்களும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பாக அனுமன் பாடல்களை பாடப்போவதாக மராட்டிய எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா அறிவித்தார் 
 
இதனையடுத்து கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகியோர் மும்பையில் கைது பேரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் வீட்டுக்கு அனுமன்  பாடல் பாடப் போவதாக அறிவித்த நடிகை கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்