முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்கு கூடுதல் காவலர்கள்: கேரள அரசு முடிவு

வியாழன், 23 ஜூலை 2015 (08:36 IST)
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கையை 22 ல் இருந்து 124 ஆக அதிகரிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது
 
கேரள காலல்துறையினர் முல்லை பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களால் தமிழக அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதால், அணைக்கு மத்திய படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கையை 22 ல் இருந்து 124 ஆக அதிகரிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
 
கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தலைமையில் நேற்று நடைபெற்ற, கேரள அமைச்சரவை கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்