ஜூலை 5ஆம் தேதி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 118 பில்லியன் என்று இருந்த நிலையில் ஜூலை 12ஆம் தேதி அவரது சொத்து மதிப்பு 121 பில்லியன் டாலர் என ஏற்றம் கண்டுள்ளது. மேலும் உலக பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி தற்போது பதினாறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.