கற்பழித்து கொலை செய்யப்பட்ட தாயும் மகளும்: இளைஞர்களை விடுதலை செய்த நீதிமன்றம்!

வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (13:43 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் தாயும் மகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் தண்டனை மேல்முறையீட்டு மனுவில் ரத்தாகியுள்ளது.


 
 
கடந்த 2015-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் சோம்பா என்ற கிராமத்தில் நூர்ஜஹான் என்ற தாயும் அவரது 14 வயது பர்வீன் என்ற மகளும் தங்கள் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
 
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தாயும் மகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை செய்ததாக அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணா என்ற 23 வயது இளைஞனும் அச்யுத் சுன்சே என்ற 24 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.
 
மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு பீட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது தொடர்பான விசாரணையின் முடிவில் இரண்டு பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பிடப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த இளைஞர்கள் சார்பில் மும்பை  உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் சாட்சிகள் கூறிய விவரங்கள் மாறி மாறி இருப்பதாகவும், காவல்துறையின் சாட்சி மற்றும் ஆதாரங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதாக இல்லை எனவும் கூறியுள்ளது நீதிமன்றம்.
 
மேலும் அரசியல் கட்சிகளின் தலையீடு இந்த வழக்கின் விசாரணையில் இருந்ததாகவும் இதனால் முறையான விசாரணை நடைபெறவில்லை எனவும் கூறி குற்றவாளிகள் 2 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.

வெப்துனியாவைப் படிக்கவும்