என் முகம் பிரகாசமாக இருப்பது ஏன் தெரியுமா ? – மோடி சொன்ன குட்டிக்கதை !

சனி, 25 ஜனவரி 2020 (15:25 IST)
மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடிய மோடி தனது முகம் பளபளப்பாக இருப்பது குறித்து குட்டிக்கதை ஒன்று சொல்லியுள்ளார்.

பள்ளிப் பருவத்திலேயே பல்வேறு துறைகளில் சாதனை செய்த மாணவர்களுக்கு பிரதான்மந்திரி பால் புரஸ்கார்'  என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த விருது பெற்ற மாணவர்களை தனது இல்லத்தில் சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது மாணவர்களிடம் பேசிய மோடி, தனது முகம் பளபளப்பாக இருப்பது என்பது குறித்து குழந்தைகளிடம் ஒரு கதை சொன்னார்.

மோடி என்னிடம் ஒருவர் முன்பொரு காலத்தில் ‘உங்கள் முகம் எப்படி இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது எனக் கேட்டார்’ நான் அவரிடம்  ‘கடுமையாக உழைப்பேன், அதனால் எனது முகத்தில் அதிகமாக வியர்வை உருவாகும். நான் அந்த வியர்வையொடு முகத்தை மசாஜ் செய்வேன். அதனால் எனது முகம் பளிச்சென்று உள்ளது.’ எனக் கூறினேன். அது போல குழந்தைகளும்  ஒருநாளைக்கு நான்கு முறை வியர்க்கும் அளவுக்கான வேலைகளை செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்