ரயில்வே பட்ஜெட் 2014 - பொது மக்களுக்கான பட்ஜெட் என நரேந்திர மோடி புகழாரம்

செவ்வாய், 8 ஜூலை 2014 (15:36 IST)
2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, வளர்ச்சி சார்ந்த பொதுமக்களுக்கு ஏற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார். 
2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர் மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது வளர்ச்சி சார்ந்த பொதுமக்களுக்கு ஏற்ற பட்ஜெட் எனவும், நாட்டின் வளர்ச்சி பயணத்தில் ரயில்வே துறையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது கவனம் செலுத்தும் விதமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
மேலும், இந்த பட்ஜெட், நாம் இந்திய ரயில்வேவை எங்கு கொண்டு செல்ல உள்ளோம் என்பதையும், ரயில்வே மூலமாக இந்தியாவை நாம் எங்கு கொண்டு செல்ல உள்ளோம் என்பதையும் காண்பிக்கிறது என்ற அவர், சேவை, வேகம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, நவீன ரயில்வேவை உருவாக்க முயற்சிக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்த சதானந்த கௌடாவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்