மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் இந்தியாவின் மதிப்பு உயரும்

ஞாயிறு, 19 ஜூலை 2015 (00:55 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தால் நமது நாட்டின் மதிப்பு உயரும் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மீண்டும் புகழாராம் சூட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் செய்தியார்களிடம் கூறியதாவது:-
 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒரு ஆண்டில் 24 நாடுகளுக்கு வெற்றிகரமாகப் பயணம் செய்துள்ளார். இதை அவரது தனிப்பட்ட பயணம் என்று பார்க்கக் கூடாது. நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கான பயணமாகவே கருத வேண்டும்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வெளிநாட்டு பயணத்தின் மூலம் நமது நாட்டின் மீது உள்ள மதிப்பு, மேலும் உயரவே செய்யும். இதில், பல நேரடி நன்மைகளும், மறைமுக நன்மைகளும் நிச்சயம் கிடைக்கும் என்றார்.
 
ஏற்கனவே, பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் யோகா தினத்தை சசி தரூர் பாராட்டி சர்ச்சையில் சிக்கினார். தற்போது, மீண்டும் மோடியை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
 
சசி தரூரின் இந்த கருத்துக் காங்கிரஸ் மூத்த தலைவர்களையும், ஆகில இந்திய தலைமையையும் கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்