ஜப்பான் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

சனி, 30 ஆகஸ்ட் 2014 (11:38 IST)
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறைப் பயணமாக அதிகாலை 6 மணிக்கு ஜப்பான் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அதிகாலை 6 மணி அளவில் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வின் அழைப்பையேற்று இந்தியா-ஜப்பான் இடையேயான  உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு ஆவலாக உள்ளேன்“ என தெரிவித்தார்.

இந்த பயணத்தின் போது, உள்கட்டமைப்பு மேம்பாடு, ராணுவம், அணுசக்தி, பூமியில் கிடைக்கும் வளங்கள் ஆகியவற்றை குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் செல்லும் பிரதமர் முதலில் க்யோட்டோ நகருக்குச் சென்று தங்குகிறார். பின்னர் அங்கிருந்து டோக்கியோ நகருக்குச் செல்கிறார்.

பிரதமர் பதவியேற்ற பின்னர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் 3 வது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்