முதல்வர் பழனிச்சாமிக்கு மோடி வாழ்த்து

வியாழன், 16 பிப்ரவரி 2017 (21:07 IST)
தமிழகத்தின் 13வது முதல்வராக இன்று மாலை பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.



வழக்கமாக ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியேற்றால் அவர் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பிரதமர் வாழ்த்து கூறுவது மரபு. அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் தனக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் மீது தனி பிரியம் உள்ளது என்றாலும் அவரது எதிர்த்தரப்புக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார். பழனிச்சாமி மெஜாரிட்டியை நிரூபித்த பின்னர் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்