மோடியை கலாய்க்கும் கன்னடர்கள்...

வெள்ளி, 4 மே 2018 (12:57 IST)
கர்நாடக தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரக்களம் சூடுபிடித்துள்ளது. வரும் மே 12 ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
 
மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பல்லாரி தொகுதியில் பிரச்சாரம் செய்தார் மோடி.
 
மோடியும் கடந்த இரண்டு நாட்களாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது, பாஜக எப்போதும் பெண்களுக்கு மதிப்பளிக்கும், ஆட்சியில் கூட பெண் ஒருவர்தான் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
 
மேலும், கர்நாடக பெண்ணை பாதுகாப்பு துறை அமைச்சராக நியமித்து இருக்கிறேன். கர்நாடகாவில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினரானவர் நிர்மலா சீதாராமன். அதேபோல் கர்நாடகாவை சேர்ந்த வெங்கையா நாயுடுதான் துணை குடியரசுத்தலைவர் என்று பேசினார். 
தற்போது, மோடியின் பேச்சு கிண்டலுக்குள்ளாகியுள்ளது. தமிழ் பெண்ணான நிர்மலா சீதாராமனை கன்னடர் என மோடி கூறியதால், கன்னடர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 
 
தமிழ் பெண் எப்படி கன்னடர் ஆக முடியும், பாவம் மோடி குழம்பி போய் இருக்கிறார் என்பது போல சிலர் மோடியின் பேச்சை கிண்டல் செய்து வருகின்றனர். சிலரோ காட்டமான டிவிட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்