திடீரென 15 பேர்களின் வங்கிக்கணக்குக்கு வந்த ரூ.10 லட்சம்: என்ன செய்தார்கள் தெரியுமா?

ஞாயிறு, 15 மே 2022 (13:39 IST)
ஒரே ஊரைச் சேர்ந்த 15 பேர் பேர்களுக்கு திடீரென தங்களது வங்கி கணக்கில் பத்து லட்ச ரூபாய் வந்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
 
தெலுங்கானா மாநிலத்திலுள்ள எஸ்பிஐ ஊழியர் ஒருவரும் தெலுங்கானா அரசின் நல திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒன்றரை கோடி ரூபாயை லோட்டஸ் ஹாஸ்பிடலில் பணி செய்யும் 15 ஊழியர்களின் கணக்கிற்கு தவறாக அனுப்பியுள்ளார்.
 
 திடீரென்று தங்கள் வங்கி கணக்கிற்கு வந்த அந்த 15 ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்த நிலையில் வங்கி ஊழியர்கள் உடனடியாக அவர்களில் 14 பேர்களை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டுள்ளனர் .
 
ஆனால் மகேஷ் என்பவரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை அடுத்து தன்னுடைய வங்கி கணக்குக்கு வந்த 10 லட்ச ரூபாயை அவர் தாறுமாறாக செலவு செய்ய ஆரம்பித்திருக்கிறார். இதனையடுத்து அவர் மீது புகார் அளித்த வங்கி ஊழியர்கள் அவரை அழைத்து விசாரணை செய்ததில் அவர் 7 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பி அளித்து உள்ளார். மீதி மூன்று லட்ச ரூபாயை செலவு செய்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்