சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சிறுமிகள்… பாலியல் ரீதியாக ஒத்துழைத்தால் மட்டுமே சம்பளம் – உத்தரபிரதேசத்தில் நடக்கும் கொடூரம்!

வெள்ளி, 10 ஜூலை 2020 (11:22 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகோட் மலைக் குவாரிகளில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் சட்டத்துக்குப் புறம்பாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுநகரம் சித்ரகோட். அங்கு ஏராளமான மலைகள் உள்ள நிலையில் குவாரி தொழிலே பிரதானமாக இருந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் வறுமைக் காரணமாக அந்த குவாரிகளில் கல் உடைக்க செல்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் 12 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளும் சட்டத்துக்குப் புறம்பாக அங்கே வேலைக்கு எடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு குறைவான சம்பளமே கொடுக்கும் குவாரி உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் அந்த சம்பளத்தையும் ஒழுங்காக கொடுக்காமல் சிறுமிகள் பாலியல் ரீதியாக ஒத்துழைத்தால் மட்டுமே கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த மாவட்ட ஆட்சியரும் மாநில அரசும் இந்த விஷயத்தில் இப்போது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. அப்பகுதி மக்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு இது போன்று அநியாயங்கள் பல ஆண்டுகளாக நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்