அமைச்சரின் பாதுகாவலர் காவலாளியை அறைந்த வீடியோ

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (16:23 IST)
ராஜஸ்தான் மாநில அமைச்சர் மகேஷ் சர்மாவின் பாதுகாவலர் ஒருவர் காவலாளியை அறைந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.


 

 
பாஜக கட்சியைச் சேர்ந்த மகேஷ் சர்மா தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக இருக்கிறார். அவர் உறவினரை சந்திக்க அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார்.
 
அங்கு குடியிருப்பு வாயிலில் இருந்த காவலாளி கதவை திறக்காமல் காரை மறித்து நிறுத்தியுள்ளார். அதனால் அமைச்சரின் பாதுகாவலர் ஆத்திரமடைந்து அந்த காவலாளியை கன்னத்தில் அறைந்துள்ளார்.
 
அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்துயுடுள்ளது. இதையடுத்து அமைச்சர் அந்த காவலாளியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
 
இதுகுறித்து காவலாளி கூறியதாவது:-
 
கதவை திறக்க எங்களுக்கு அதிகபட்சமாக 2 நிமிடம் ஆகியிருக்கும். அதற்குள் அந்த பாதுகாவலர் வந்து அடித்துவிட்டார், என்று கூறினார்.
 

நன்றி: NDTV India
 

வெப்துனியாவைப் படிக்கவும்