மந்திரியின் ஆபாச சிடியை வெளியிட்ட உதவியாளர் கைது

திங்கள், 5 செப்டம்பர் 2016 (18:00 IST)
டெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சந்தீப் குமாரின் ஆபாச சிடியை வெளிட்ட அவரின் உதவியாளர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.


டெல்லியில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சிடி வெளியானதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சிடியில் அமைச்சருடன் இருந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் அவர், கடந்த ஆண்டு ரேசன் கார்டு தொடர்பாக அமைச்சர் சந்தீப் குமாரை அணுகியபோது அவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார்.

அதன்பேரில் காவல் துறையினர் முன்னாள் அமைச்சரை கைது செய்தனர். அமைச்சரிடம் காவல் தூரையினர் நடத்திய விசாரணையில் மந்திரி பெண்ணுடன் நெருக்கமாக இருந்த சிடியை அவரது உதவியாளர் தான் வெளியிட்டது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் அமைச்சரின் உதவியாளரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்