கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது மருத்துவ பொது நுழைவுத்தேர்வு

ஞாயிறு, 1 மே 2016 (20:41 IST)
முதல் கட்ட மருத்துவ பொது நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் அதிக கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது. இந்த மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தமிழ் நாட்டில் இருந்து 26 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்.


 
 
இந்த மருத்துவ பொது நுழைவுத்தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு, ஷூ, செல்போன், வளையல், கம்மல், செயின் போன்றவை அணிய தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை எழுதாத மாணவ, மணவிகள் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் தேசிய தகுதி தேர்வை எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை தீவுத்திடல் அருகே உள்ள பள்ளியில் இந்த மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி இந்த தேர்வின் முடிவு வெளியாகும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்