அவர்களைப் பிடிக்க மத்திய பாதுகாப்பு படையான சி.ஆர்.பி.எப்-பின் 205வது கோப்ரா கமாண்டோ வீரர் கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காட்டுக்குள் புகுந்து மாவோயிஸ்டு தீவிர வாதிகளை சுற்றி வளைத்தனர். இதனை அறிந்த மாவோயிஸ்டுகள் ஏ.கே.47 ரக துப் பாக்கிகளால் கமாண்டோ வீரர்களை நோக்கி சுட்டனர். கமாண்டோ வீரர்கள் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த நிலையில் காட்டுக்குள் குறிப்பிட்ட ஒரு பகுதியில் கமாண்டோ வீரர்கள் சிக்கி கொண்டனர். அப்போது 21 கண்ணி வெடிகள் பயங்கரமாக வெடித்தன. அதில் கமாண்டோ வீரர்கள் சிக்கிகொண்டனர். இதில் 10 கமாண்டோ வீரர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.