மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு: பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

வியாழன், 24 நவம்பர் 2022 (16:55 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் மங்களூரில் நிகழ்ந்த ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆட்டோவில் சாதிக் என்பவர் நிகழ்த்திய குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரேசிஸ்டன்ஸ் கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு உள்ளதாக கர்நாடக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது 
 
இந்த குழுவில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இலக்கை அடையவில்லை என்றாலும் இதை நாங்கள் வெற்றியாக கருதுகிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
இந்த குண்டுவெடிப்பில் சாரிக் உள்பட 3 பேர் காயமடைந்தனர் என்பது அவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்