மத்திய பிரதேசத்தில் உள்ள ச்சோலா என்ற பகுதியின் மைய இடமான ஷங்கர் நகர் பகுதியில் உள்ள அந்த கடைக்கு வந்த வினோத் அஹிர்வார் என்ற நபர், வந்துள்ளார். அப்போது அவர் கடை உரிமையாளரிடம் எதுவும் சொல்லாமல் சமோசாவை எடுத்துத் தின்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கடை உரிமையாளர் ஹரி சிங் அஹிர்வார் அவரை ஒரு தடியால் தலையில் அடித்துள்ளார். இதையடுத்து அவர் அங்கேயே விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரின் மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.