அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன்: முதல்வர் அதிரடி உத்தரவு

வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:56 IST)
அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சிக்கன் மற்றும் பழங்கள் வழங்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாணவ மாணவிகளின் ஊட்டச்சத்து கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுகள் சிக்கன் மற்றும் பாலங்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட்டுள்ளார் 
 
தற்போது மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் சாதம் பருப்பு காய்கறிகள் சோயா பீன்ஸ் முட்டை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை வாரந்தோறும் சிக்கன் மற்றும் பழங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்