முதல்வரை சந்திக்க தயராகும் கனிமொழி

வெள்ளி, 27 மே 2016 (10:01 IST)
முதல்வர் பதவியேற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியை வாழ்த்த திமுக எம்பி கனிமொழி கொல்கத்தா செல்கிறார்.
 

 
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று, அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது  முறையாக பதவியேற்க உள்ளார்.
 
தனது பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்.
 
அரசு பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களால் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பதவியேற்புவிழாவுக்கு  செல்லவில்லை. இதனையடுத்து, திமுக சார்பில், ராஜ்யசபா எம்பி கனிமொழி இந்தப்பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜியை வாழ்த்துகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்