ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை: மல்லிகார்ஜூன கார்கே

வியாழன், 16 மார்ச் 2023 (12:52 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் லண்டனில் பேசியதாக பாஜகவினர் கூறிவரும் நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பாஜக எம்பிகள் கோஷமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணங்களில் போது இந்தியா குறித்து எத்தனை முறை ஏளனமாக பேசி உள்ளார் தெரியுமா? என்ற கேள்வி எழுப்பினார். 
 
இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்படுவதாக சீனா சென்றிருந்தபோது கூறினார் என்றும் அது இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் அவமானம் இல்லையா என்றும் தென்கொரியா பயணத்தின் போது இந்தியாவில் பிறந்ததற்காக முன் ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோம் என்று மக்கள் வருந்திய காலம் இருந்தது என்றும் பேசி உள்ளார். 
 
எனவே ராகுல் காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவரது கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்