பிரபல மலையாள நடிகை அருந்ததி ஃபேஸ்புக் முடக்கம்

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (02:58 IST)
மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கு தண்டனை குறித்து கருத்து தெரிவித்த பிரபல மலையாள நடிகை அருந்ததியின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது.
 

 
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி யாகூப் மேமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிலிடப்பட்டார்.
 
இதனையடுத்து, யாகூப் மேமன் தூக்கு தண்டனை குறித்து  ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்பட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க  கூடாது என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
 
இந்நிலையில், பிரபல மலையாள நடிகை அருந்ததி, யாகூப் மேமன் தூக்கு தண்டனை குறித்து, தனது ஃபேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்டார். இதனையடுத்து, உடனே அவரது ஃபேஸ்புக் முடக்கப்பட்டது.
 
இது சம்பவம் குறித்து நடிகை அருந்ததி கூறுகையில், எனது பேஸ்புக் பக்கத்தை முடக்கியது தவறான முன்உதாரணம் ஆகும். ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை தருகிறது. இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என சீறியுள்ளார்.
 
ஆனால், மலையாள திரைப்பட உலகில் பலரும், ஒரு நடிகையின் கடமை என்பது  ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே, அதைத் தாண்டி, தேவையில்லாத விஷயத்தில்  தலையிட்டால், இது போன்ற நிலைகளை சந்தித்துதான் ஆகவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்