ராஜபக்சேவை நண்பர் என தெரிவித்த பிரதமர் மோடி: கொந்தளிக்கும் தமிழர்கள்

ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (08:00 IST)
ராஜபக்சேவை நண்பர் என தெரிவித்த பிரதமர் மோடி
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது விடுதலைப்புலிகள் தோல்வியுற்றனர் என்பதும் அப்போது நடந்த போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.அப்போது இலங்கையின் அதிபராக இருந்த ராஜபக்சே என்றும் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அவர்தான் காரணம் என்றும் தமிழர் மத்தியில் பேசப்பட்டது. 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தமிழில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் இலங்கை பிரதமர் ராஜபக்சே தனது நெருங்கிய நண்பர் என்றும் அவருடன் உரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்றும் இந்திய-இலங்கை உறவுகள் குறித்து அவரிடம் தான் கலந்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை பிரதமராக இருக்கும் மகிந்த ராஜபக்சவினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட  நிலையில் அவரை தனது நண்பர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது

எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன். அபிவிருத்தி,பொருளாதார உறவு ,சுற்றுலாத்துறை,கல்வி,கலாசாரம், பரஸ்பர நலன் அடிப்படையிலான பிராந்திய & சர்வதேச விவகாரங்கள் உட்பட தனித்துவமிக்க இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம். pic.twitter.com/yoISJMcf5i

— Narendra Modi (@narendramodi) September 26, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்