எரிவாயு வாட் வரியை குறைத்தது மகாராஷ்டிரா அரசு!

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:52 IST)
இயற்கை எரிவாயு மீதான வாட் வரியை மகாராஷ்டிர மாநில அரசு குறைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பெட்ரோல் டீசல் எரிவாயு ஆகியவை நாளுக்கு நாள் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் இயற்கை எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரியை மகாராஷ்டிர அரசு குறைத்துள்ளது 
 
இதனால் மும்பையில் எரிவாயு விலை கிலோ 8 ரூபாய் குறைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோ டாக்சி, கார், பேருந்துகள் ஆகியவைகளின் உரிமையாளர்கள் இதனால் பயன் பெறுவார்கள் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது 
 
இதனால் அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்றாலும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் வாட் வரி குறைக்கப்பட்டதாக மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்