மத்திய பிரதேச மாநிலம், ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள காடுகளில் அமைந்திருக்கிறது சத்புரா புலிகள் சரணாலயம். இந்த காட்டில் உள்ள ஒரு இலுப்பை மரத்திற்கு நோய்களை போக்கக்கூடிய சக்தி உள்ளதாகவும், அதனை தொட்டாலே நோய்களெல்லாம் பறந்து போகும் எனவும் பரவிய செய்தியால் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பொது மக்கள் அந்த காட்டிற்குள் பெருந்திரளாக குவிந்த வண்ணம் உள்ளனர்.
இது குறித்து ஹோசங்காபாத்தின் கூடுதல் காவல் சூப்பிரண்டண்டு கான்ஷ்யாம் மால்வியா, “கிட்டத்தட்ட 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த காட்டிற்குள் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். ஆதலால் மக்களை கட்டுபடுத்த பெரிதும் சிரமமாக உள்ளது என கூறுகிறார்.
மேலும் இது குறித்து சாத்புரா புலிகள் சரணாலயத்தின் இயக்குனர் எஸ்.கே.சிங்” நகர எல்லை பகுதியில் இந்த இலுப்பை மரம் அமைந்திருப்பதால், வனவிலங்குகளுக்கு அதிக தொந்தரவு இல்லை என்றாலும், பின்னர் தொந்தரவாக மாறலாம், ஆகையால் நிலைமை மோசமாவதற்குள் இதற்கொரு முடிவு எடுத்தாக வேண்டும்” என கூறியுள்ளார்.
ஒரு மாத காலமாக மக்கள் குவிந்த வண்ணமாக இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை ஆனால் மேலும் அதிகமான மக்கள் பெருந்திரளாக படை எடுப்பதால் மக்களை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போலீஸார் திண்றுகின்றனர் எனவும் கூறப்படுகிறது.