சிறுநீரகம் செயலிழந்த அமைச்சர் சுஷ்மா சுவராஜ்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

புதன், 16 நவம்பர் 2016 (11:34 IST)
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறுநீரகம் செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கிருஷ்ணர் தனக்கு அருள் புரிவார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


 
 
கடந்த 7-ஆம் தேதி இரவு சர்க்கரை நோய் மற்றும் உடல் உப்பதைகள் காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நியூரோ செண்டரில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் பல்ராம் ஐரான் கண்காணிப்பில் அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில் சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக தான் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் சுஷ்மா கூறியுள்ளார். தற்போது டயாலிசிஸ் சிகிச்சை நடந்து வருவதாகவும், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான பரிசோதனைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
64 வயதான அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடவுள் கிருஷ்ணன் தனக்கு அருள் புரிவார் என கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக அவர் சிறுநீரக கோளாரால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்