கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 48,46,427 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 1,136 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 79,722 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 77,512 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ள நிலையில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37,80,107 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,86,598 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தின் மக்களவை கூடியது. இதில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியா சிறப்பாக செயல்பட்டதால் கொரோனா பாதிப்பு 10 லட்சம் பேருக்கு 3,328 பேர் என்ற வீதத்திலும், இறப்பு எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 55 பேர் என்ற வீதம் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
இதேபோல சமீபத்தில் இவர் கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டால், நானே தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவேன் என தெரிவித்திருந்தார் என்படு குறிப்பிடத்தக்கது.