ஊரடங்கு உத்தரவு திடீர் நீட்டிப்பு: முதல்வரின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு

திங்கள், 6 ஏப்ரல் 2020 (20:36 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மக்கள் அனைவரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 3 வரை நீட்டிக்கப்படுவதாக தெலுங்கான மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனால் அம்மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜூன் 3 வரை என்றால் இன்னும் ஒன்றரை மாதங்கள் ஊரடங்கு நீடிப்பா? என்ற அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.
 
இந்த நிலையில் தெலுங்கானா மட்டுமின்ரி தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில முதல்வர்களும் இதுபோன்ற ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்