2 ஆயிரம் கடனுக்காக மனைவியை ஆபாசமாக சித்தரித்த லோன் ஏஜெண்ட்! - விரக்தியில் கணவன் தற்கொலை!

Prasanth Karthick

புதன், 11 டிசம்பர் 2024 (16:52 IST)

ஆந்திராவில் லோன் செயலி மூலம் கடன் வாங்கிய நபர் அதை கட்டாததால் அவரது மனைவியை ஆபாசமாக சித்தரித்ததால் அவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஆன்லைன் மூலமாக லோன் வழங்கும் சில லோன் செயலிகள் மூலம் கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் போகும்போது, லோன் செயலியிலிருந்து பேசுபவர்கள் கீழ்தரமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக உள்ளது.

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த நரேந்திரா என்பவர் மீனவராக இருந்துள்ளார். இவர் கடந்த அக்டோபர் மாதம் அகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஆன்லைனில் கடன் வழங்கும் லோன் செயலி மூலமாக கடன் பெற்றுள்ளார். 

 

கடனை திரும்ப அவர் செலுத்த முயற்சித்தபோது, அவரை உடனடியாக பணத்தை செலுத்தும்படி லோன் ஏஜெண்ட் போன் செய்து மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் நரேந்திராவின் மனைவி அகிலாவின் படத்தை ஆபாசமாக சித்தரித்து நரேந்திராவின் தொடர்பில் உள்ள அனைத்து எண்களுக்கும் அனுப்பியுள்ளார். இதனால் பலரும் நரேந்திராவிடம் இதுபற்றி சொல்ல மனவேதனை அடைந்த நரேந்திரா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இதுபோல ஆன்லைன் மூலமாக கடன் கொடுத்து இப்படி ஆபாசமாக மிரட்டுவது, கெட்ட வார்த்தையில் அவதூறாக பேசுவது போன்றவை தொடர் கதையாக உள்ள நிலையில் இதுகுறித்து சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்