எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி..! உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ரிப்போர்ட்..!!

Senthil Velan

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (16:26 IST)
உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
பாஜக வளர மிக முக்கிய காரணமாக இருந்த தலைவர்களில் அத்வானியும் ஒருவர்.  உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடைபெற்றது. அதன்பிறகு தான் பாஜக வேகமாக வளர தொடங்கியது. 
 
அதுமட்டுமின்றி பாஜகவின் நீண்டகால தேசிய தலைவராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் 2002 முதல் 2004 ம் ஆண்டு வரை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது துணை பிரதமராக பதவி வகித்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். 
 
எல்கே அத்வானிக்கு கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜகவில் சீட் வழங்கப்படவில்லை. வயது முதிர்வை காரணம் காட்டி பாஜக மேலிடம் சீட் வழங்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து எல்கே அத்வானி ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது அவருக்கு 96 வயது ஆகிறது.

சமீபத்தில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வீடு தேடி சென்று பாரத ரத்னா விருது வழங்கினார். எல்கே அத்வானி தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக அவர் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில்  எல்கே அத்வானிக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

ALSO READ: வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு.! விரைவில் இடைக்கால அரசு..! ராணுவம் அறிவிப்பு..!!

இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள், சிகிச்சை அளித்து வருகின்றனர். எல்.கே.அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்