பீகாரில் மது மீதான தடையால் மாதம் ரூ.440 கோடி சேமிப்பு!

திங்கள், 18 ஜூன் 2018 (13:27 IST)
பீகாரில் மதுபானம் தடையால் மாதம் ரூ.440 கோடி சேமிக்கப்படுவதாக ஆசிய அபிவிருந்தி ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

 
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் 2016ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் மதுவிற்கு தடை விதித்தார். மதுவிற்கு தடை விதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளான நிலையில் மாநிலத்தின் வர்த்தகம் குறித்து ஆசிய அபிவிருந்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து அதன் முடிவை வெளியிட்டுள்ளது.
 
தரமான உணவுப்பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்குவதில் பெண்கள் அதிக அளவில் கவனம் செலுத்துவது தெரியவந்துள்ளது. விலை உயர்ந்த சேலைகளின் வர்த்தகம் 1,751 சதவிகிதமும், உயர்தர ஆடைகளின் வர்த்தகம் 910 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. 
 
மற்றொரு ஆய்வில் 19% குடும்பங்கள் மதுவிற்கு செலவழிக்கு பணத்தில் புதிய சொத்துக்களை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. மது மீதான தடையை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் ரூ.440 கோடி சேமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்