வாழ்நாள் முழுவதும் தினமும் எவ்வளவு பானிபூரி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. எவ்வளவு தெரியுமா?

Mahendran

சனி, 15 பிப்ரவரி 2025 (15:07 IST)
99 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால், வாழ்நாள் முழுவதும் தினமும் எவ்வளவு பானிபூரி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கடை சிறப்பு சலுகையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து அந்த கடை உரிமையாளர் கூறுகையில், "எங்களிடம் ஒரு ரூபாயில் இருந்து 99 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு சிறப்பு சலுகைகள் உள்ளன. ஒருநாள் முதல் வாழ்நாள் முழுவதும் உள்ள திட்டங்களை விரும்புபவர்கள் சேரலாம்" என்று தெரிவித்தார்.
 
குறிப்பாக, 99 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், வாழ்நாள் முழுவதும் தினமும் எந்த அளவிற்கும் பானிபூரி சாப்பிடலாம் என்ற அவரது அறிவிப்பு மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.
 
மேலும், மாதம் ரூ.195 செலுத்தினால், ஒரு மாதம் முழுவதும் பானிபூரி சாப்பிடும் சலுகையும் உள்ளது என அந்த கடை உரிமையாளர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதாகவும், தினமும் ஏதாவது ஒரு திட்டத்தில் பலர் சேர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்