ரயில்வே பட்ஜெட் 2014 - 'எஸ்.எம்.எஸ் மூலம் உணவு ஆர்டர், பயணிகளுக்கு RO குடிநீர்'

செவ்வாய், 8 ஜூலை 2014 (14:51 IST)
2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, ரயில் பயணிக்கும் பயணிகள் எஸ்.எம்.எஸ் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம் எனவும், பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட RO குடிநீர் வழங்கப்படும் எனவும் எனத் தெரிவித்துள்ளார் 
2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர் மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். 
 
2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த அவர், ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு, குடிநீர் ஆகியவற்றுடன் சுத்தமான சூழலை உறுதி செய்ய 40 சதவீத அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு சுத்தமான போர்வைகள், படுக்கை வசதிகளை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
 
மேலும், ரயிலில் உணவு ஆர்டர் செய்யும் பயணிகளுக்கு தரமான உணவு அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஒ தண்ணீர் அளிக்கப்படும் எனவும், ரயில் வழங்கப்பட்ட உணவின் தரத்தை குறித்து அறிய 'இண்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ்' (IVRS) முறை பயன்படுத்தப்படும் எனவும், பயணிகள் அவர்களது உணவை எஸ்.எம்.எஸ் மூலமாகவோ அல்லது மொபைல் மூலமாகவோ ஆர்டர் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்