இம்மா நிலத்தில், ரயில்துறையில் வேலை வாங்கித் தருவதாக நிலம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று லாலு இவ்வழக்கு தொடர்பாக டெல்லி, பீகார் போன்ற இடங்களிலும், லாலுவின் உறவினர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.