தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மாவட்ட நிர்வாகிகளோடு காணொளி வழியாக பேசி வரும் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் விவேகானந்தரை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். முன்னதாக கருப்பர் கூட்டம் விவகாரத்தின்போதும் திமுக மத நம்பிக்கைகளுக்கு எதிரான கட்சி அல்ல என பேசியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் “ஸ்டாலினுக்கு தேர்தல் குறித்த பயம் வந்துவிட்டதால் விவேகானந்தர், ஆன்மிகம் என பேசுகிறார். கடவுள் இல்லை என சொன்னால் மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது” என்று கூறியுள்ளார்.