ஆந்திர பேருந்து தீ விபத்து: ஓட்டுநர் அலட்சியம் தான் விபத்துக்கு காரணமா? அதிர்ச்சி தகவல்..!

Siva

சனி, 25 அக்டோபர் 2025 (09:59 IST)
ஆந்திராவின் கர்நூலில் தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து, பல குடும்பங்களை மீளாத துயரில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் வேலை செய்து வந்த 23 வயது அனுஷா மற்றும் சில மாதங்களுக்கு முன் பணிக்கு சேர்ந்த மேக்நாத் உட்பட பல இளைஞர்களின் எதிர்காலம் இந்த தீயில் கருகியது.
 
"மகளை பேருந்து நிலையத்தில் வழியனுப்பியதே கடைசி பார்வையாகிவிட்டது" என்று அனுஷாவின் பெற்றோர் கதறுகின்றனர். "என் மகன் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்?" என்று மேக்நாத்தின் தாயும் கண்ணீருடன் சம்பவ இடத்தில் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.
 
விபத்தில் உயிர் தப்பிய குணா சாய், பேருந்தில் பாதுகாப்பு குறைபாடுகளை அம்பலப்படுத்தினார். "பேருந்தில் கண்ணாடியை உடைப்பதற்கான சுத்தியல் இல்லை. ஓட்டுநர் உதவவில்லை. நான் ஜன்னல் வழியாக குதித்து தப்பித்தேன்," என்று அவர் தெரிவித்தார்.
 
தெலங்கானா அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ், இந்த சம்பவத்துக்கு ஓட்டுநரையும், பயண நிறுவனத்தையும் குற்றம் சாட்டி, கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இந்த துயர சம்பவத்தின் உண்மை காரணத்தை கர்நூல் எஸ்.பி. விக்ராந்த் தலைமையிலான காவல்துறை விசாரித்து வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்