காவிரி விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் “ காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை நிறைவேற்றுவது கர்நாடக அரசின் கடமை. அணையின் கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால், அணையின் கட்டுப்பாடு மாநிலங்களிடமே இருக்கிறது. இது சரியாக இருக்காது” என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள குமாரசாமி “ரஜினி அரசாங்கத்தை சேர்ந்தவர் இல்லை என்பதால் காவிரி விவகாரத்தில் அவரின் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஒரு சராசரி மனிதனாக அவர் காவிரி நீர்த்தேக்கத்தின் நிலையை பார்த்தால் ரஜினி தன்னுடைய மனநிலைமையை மாற்றிக்கொள்வார்” எனக் கூறியுள்ளார்.