அதன்படி கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக 23-ந் தேதி பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்தார். மேலும் இந்த பதவியேற்பு விழாவிற்கு ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு காரணமான சோனியா காந்தி, ராகுல்காந்தி, சித்தராமையா ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக குமாரசாமி தெரிவித்தார்.