மத்திய பிரதேச மாநிலத்தில் ரதலம் மாவட்டத்தைச் சேர்ந்த சாகன் என்பவர் அவரது மகனுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்து இருந்தார். அந்த மொபைல் போனை காணவில்லை என சாகன் மகனிடம் கேட்டுள்ளார். மகன், தனது நண்பர்கள் எடுத்துக் கொண்டதாக கூறி உள்ளான்.
சாகன் தனது மகனின் நண்பர்கள் 5 பேரை அழைத்து மொபைல் போனை யார் எடுத்தது என விசாரித்துள்ளார். மொபைல் போனை யாரும் எடுக்கவில்லை என கூறியுள்ளனர். இதையடுத்து சாகன் கொதிக்கும் எண்ணையை ஒரு பானையில் வைத்து, போனை எடுக்காதவர்கள் இந்த பானைக்குள் கைவிடுங்கள் என்றும், எடுக்காதவர்கள் கை ஒன்றும் ஆகாது என்றும் கூறியுள்ளார்.
5 சிறுவர்களும் கையை பானைக்குள் விட்டுள்ளனர். அவர்கள் 5 பேரின் கையும் தீ காயமாகியது. இதனால் 5 சிறுவர்களின் பெற்றோர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். உடனே காவல்துறையினர் சாகன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலு, வரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.