இதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி., இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் எனவும், அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், 100 % தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி பேரிடர் ஆணையம் தற்போது ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ஒமிக்ரான் பாதிப்பு 57 ஆக இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.